03rd January 2019 15:04:32 Hours
இலங்கை இராணுவத்தில் வருடாந்தம் படையணிகளுக்கு இடையில் இடம்பெறும் எல்லைப் போட்டிகள் சாலியபுரையில் உள்ள கஜபா படையணி தலைமையகத்தில் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
இந்தப் போட்டியில் இலங்கை இராணுவத்திலுள்ள ஆண், பெண் வீராங்கனைகள் 100 பேர் பங்கேற்றிக் கொண்டனர்.
வருடாந்த எல்லைப் போட்டிகள் இலங்கை இராணுவ எல்லைச் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ரஷிக பெர்ணாண்டோ அவர்களின் பூரண மேற்பார்வையில் இடம்பெற்றது. இந்த வருடாந்த இறுதிச் சுற்றுப் போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாக வடமத்திய மாகாண முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் எச். குலதுங்க அவர்கள் வருகை தந்தார்.
இலங்கை இராணுவத்திலுள்ள 15 படையணிகள் இந்த போட்டிகளில் ஈடுபட்டனர். இராணுவ மகளீர் படையணியைச் சேர்ந்த 6 படையணிகளும் பங்கேற்றிக் கொண்டனர்.
ஆண்களுக்கான எல்லைப் போட்டி இறுதிச் சுற்றில் இலங்கை படைக் கலச் சிறப்பணி மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு இடையில் இடம்பெற்ற போது இலேசாயுத காலாட் படையணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டது. மூன்றாவது இடத்தை இராணுவ சேவைப் படையணி பெற்றுக் கொண்டது. பெண்களுக்கான போட்டியில் இராணுவ மகளீர் படையணி வெற் றியை சுவீகரித்துக் கொண்டது.
இந்த ஆட்டத்தில் சிறந்த விளையாட்டு வீரனாக இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த போர் வீரன் என்.டி.டி தில்ருக்ஷவும் சிறந்த களத்தெடுப்பு வீரர்களாக இராணுவ படைக்கலச் சிறப்பணியின் லான்ஸ் கோப்ரல் எஸ்.டீ குமார மற்றும் இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த போர் வீரன் ஆர்.ஏ.எஸ் லெனோரா தேர்தெடுக்கப்பட்டனர்.
மகளீர் படையணிகளுக்கு இடையிலான எல்லைப் போட்டிகளில் 5 ஆவது மகளீர் படையணியைச் சேர்ந்த போர் வீராங்கனை எம்.என்.எல்.கே தமயந்தி சிறந்த மகளீர் வீராங்கனையாகவும், எஸ்.ஏ.ஏ.எஸ் பெரேரா மற்றும் டப்ள்யூ.என் சமன்மலி சிறந்த துடுப்பாட்டு வீராங்கனைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இராணுவ எல்லைச் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ரஷிக பெர்ணாண்டோ அவர்களினால் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. Running Sneakers Store | Marki