Header

Sri Lanka Army

Defender of the Nation

01st January 2019 18:35:56 Hours

இலேசாயுத காலாட் படையணியின் ‘பாபல மேலா’ விழா

இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியினால் வருடாந்தம் மேற்கொள்ளும் ‘பாபல மேலா’ நிகழ்ச்சிகள் ஹிக்கடுவ பொது மைதானத்தில் டிசம்பர் 28 – 29 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்கள் வருகை தந்தார்.

நிகழ்வில் புகழ் பெற்ற சன்பிலவர் மற்றும் சீதுவ சகுரா இன்னிசைக் குழுவினர் இந்த நிகழ்ச்சியில் இன்னிசைகளை வழங்கி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா முதலாவது நாள் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்தார்.

இரண்டாவது நாள் இடம்பெற்ற நிகழ்வின் போது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்கள் வருகை தந்தார்.

இந்த நிகழ்வின் போது அங்கவீனமுற்ற படை வீரர்கள் ஐவருக்கு சக்கர நாற்காலி வழங்கி கௌரவிக்கப்பட்டன. அத்துடன் அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கு வீட்டு நிர்மான பணிகளுக்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதி நன்கொடையாக வழங்கப்பட்டது. அத்துடன் சீட்டிழுப்பு நிகழ்வும் இடம்பெற்றன.

மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா, மேஜர் ஜெனரல் ரஹித அம்பேமோட்டி, இலேசாயுத காலாட் படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி துஷாரி குலதுங்க அவர்கள் இணைந்து கொண்டனர். latest jordans | Air Jordan 5 Raging Bull Toro Brovo 2021 DD0587-600 Release Date Info , Iicf