02nd January 2019 17:07:27 Hours
இலங்கை இராணுவத்திலுள்ள 54, 11 மற்றும் 62 ஆவது படைப் படைப் பிரிவில் உள்ள இராணுவத்தினர் மற்றும் சிவில் சேவையாளர்களின் குடும்ப அங்கத்தவர்களது சுற்றுலா பயணம் இடம்பெற்றது.
இந்த சுற்றுலா பயணத்தில் இராணுவ அங்கத்தவர்கள் 74 பேரும், 374 குடும்ப அங்கத்தவர்களும் இணைந்திருந்தனர். இவர்கள் அநுராதபுரம், மிஹிந்தலை, தந்திரிமலை மற்றும் மன்னார் மடு தேவாலயங்களுக்கு இந்த சுற்றுலாவை மேற்கொண்டனர்.
54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் செனரத் பண்டார அவர்களின் ஏற்பாட்டில் (21) ஆம் திகதி காலை வவுனியா படைப் பிரிவு தலைமையகத்தில் இன்னிசை நிகழ்வுகள் மற்றும் சிறார்களுக்கு விநோதமாக நேரத்தை களிக்கும் வகையில் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணாயக்கார அவர்களின் பூரண ஏற்பாட்டுடன் சிவனொலிபாத வழிபாடுகள் , நான்கு பஸ் வண்டிகள் மற்றும் உணவு தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் தம்மிக ஜயசிங்க அவர்களது பூரண ஒத்துழைப்புடன் 240 இராணுவ அங்கத்தவர்களது குடும்ப அங்கத்தவர்கள் 240 பேரும் 60 இராணுவ அங்கத்தவர்களுக்கும் உணவு மட்டும் தங்குமிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. புல்மோட்டையில் உள்ள இலங்கை கனின மணல் தொழிற்சாலையையும் சென்று பார்வையிட்டனர். Running Sneakers | Ανδρικά Nike