02nd January 2019 20:01:30 Hours
இவ்வருட புத்தாண்டு தினத்தை முன்னிட்டு யாழ் குடா நாட்டில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள் 10 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களினால் இந்த மாணவர்களுக்கு இந்த துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் இம்மாணவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் இராணுவ அதிகாரிகள் இணைந்திருந்தனர்.
இரண்டு நாட்கள் கிறிஸ்மஸ் திருவிழா நிகழ்வுகளும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் யாழ் கோட்டை வளாகத்தினுள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இந்த திருவிழாக்களில் பெரும்பாலான அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிறார்கள் வருகை தந்து விநோதமடைந்தனர்.
அத்துடன் ‘யாரி டியூன்’ ,இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரது இன்னிசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. இந்த நிகழ்வுகள் டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுனர் மதிப்புக்குரிய ரெஜினோல்ட் குரே, யாழ் மாவட்டத்தின் அருட்பணி பி ஜபரத்னம் அடிகளார், யாழ் நீதிமன்றத்தின் நீதிபதி, யாழ் மாவட்ட செயலாளர், இந்திய தூதரகத்தின் அதிகாரி, முப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்திருந்தனர். Asics footwear | UK Trainer News & Releases