01st January 2019 18:32:32 Hours
ஜனாதிபதி விசேட படையணியால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கமைய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் 58ஆவது படைப் பிரிவினரால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கடந்த செவ்வாய்க் கிழமை (01) வழங்கப்பட்டது.
மேலும் 58ஆவது படைப் பிரிவினர் மேற்கு பாதுகாப்பு படையினர் வன்னி மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படையினர் போன்றோர் மாத்தறை காலி தென் களுதரை கொழும்பு கோட்டை மருதானை கம்பஹா குருநாகல் மஹாவை கல்கமுவை அநுராதபுர மற்றும் கிளிநொச்சி போன்ற பிரதேசங்களுக்கு புகையிரதத்தின் மூலம் நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்று பகிர்ந்தளித்துள்ளனர். Sports Shoes | Nike