31st December 2018 15:58:56 Hours
வெள்ள அனர்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் இரத்தினபுரம், ஆனந்தபுரம், பாரதிபுரம், காலிநகர், உலவணூர், மையில்வானபுரம், கொலந்துபுரம், கல்லாறு, தர்மபுரம், வெலிகந்தன், முரசுமோட்டை, யூரியன், கந்தவேலி, நாகேந்தரபுரம், பண்ணான்கட்டி, பொன்னகர், இந்துபுரம் கிராமம் போன்ற பகுதிகளில் இராணுவம் மற்றும் கடற்படையினரின் உதவியால் இப் பிரதேசம் இயல்புக்கு நிலைக்கு திரும்பியது.
அதற்கமைய இப் பிரதேச மக்களின் குடிநீர் தேவையை கருத்திற்கொண்டு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுஹேரா மற்றும் 57 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களின் ஆலோசனைக்கமைய 571, 572 மற்றும் 574 ஆவது படைப் பிரிவின் படையினர்களுடன் இலங்கை கடற்படையினரும் இணைந்து நீர்முழ்கி குழாய்களின் உதவியுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிநீர் கிணறுகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை மேற் கொண்டன.
இப் பணிகள் (30) ஆம் திகதி மாலை வெள்ளப்பெருக்கின் நிலமையயை பரிசீலனை செய்த பின்னர் 6 ஆவது சிங்க படையணி 3ஆவது கஜபா படையணி 9ஆவது விஜபாகு காலாட் படையணி 14 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையினரால் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் இப் பிரதேசங்களில் வெள்ளநீர் கலந்த 102 கிணறுகளை சுத்திகரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டன. அத்துடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் 57 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதிகளால் வெள்ள பேரழிவால் தங்கள் சமையல் பாத்திரங்கள் மற்றும் அத்தியவசிய பொருட்களை இழந்த இப் பிரதேச மக்களுக்கு உணவுகள் வழங்கினர். Running sports | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger