29th December 2018 19:14:14 Hours
நத்தார் தினத்தை முன்னிட்டு 621ஆவது படைப் பிரிவினரின் ஏற்பாட்டில் 62 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் தம்மிக்க ஜயசிங்க அவர்களின் வழிக்காட்டலுக்கமைய வெலிஓயா பிரதேசத்தில் வசிக்கும் 251 பொது மக்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
அதற்கமைய 'அபேகட்டிய மிதுருஹமுவ' குழுவினாரால் பாரகிராமபுரம், பதவிய, ஸ்ரீபுர, வெலிஓயா போன்ற பிரதேசத்தில் உள்ள வெத்தார, ஹேரண வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட பின்னர், பாரகிராமபுரம் மகா வித்தியாலய வளாகத்தில் கடந்த (24) ஆம் திகதி இலவசக் மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் நன்கொடையாழிகள் 62 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் தம்மிக்க ஜயசிங்க, 621 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி கேர்ணல் சாந்த ரணவீர, 621, 62 படைப் பிரிவுகளின் சிரேஷ்ட அதிகாரிகள், 14 ஆவது (தொண்டர்) இலங்கை இராணுவ காலாட் படையணி மற்றும் 17 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியினரும் கலந்து கொண்டனர். Asics shoes | Nike React Element 87