28th December 2018 17:15:29 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இலங்கை இராணுவ மருத்துவ படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த 900 படையினரது பங்களிப்புடன் பருவ தின ஆராதனைகள் பனாகொட இராணுவ பௌத்த விகாரையில் (22) ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த ஆராதனை பூஜைகள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது வழிக்காட்டலின் கீழ் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இந்த பௌத்த ஆராதனை நிகழ்வில் பௌத்த தேரர்கள் மற்றும் பிரதேச வாசிகள் கலந்து கொண்டதுடன் புஸ்ப பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.buy shoes | Top Quality adidas Yeezy 700 V3 "Eremiel" GY0189 , Ietp