28th December 2018 17:15:33 Hours
இலங்கை இராணுவத்திலுள்ள படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான உடல் கட்டமைப்பு மற்றும் எடை தூக்கும் போட்டிகள் பனாகொட இராணுவ முகாம் விளையாட்டு உள்ளரங்கத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்கள் வருகை தந்தார். இவரை இராணுவ உடல் கட்டமைப்பு சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் டப்ள்யூ.ஆர் பல்லிகக்கார அவர்கள் வரவேற்றார்.
உடல் கட்டமைப்பு போட்டியில் இராணுவ பொது சேவைப் படையணி சம்பியனாகவும், கெமுனு காலாட் படையணி இரண்டாவது இடத்தையும், இலங்கை படைக்கலச் சிறப்பணி மற்றும் இலங்கை இராணுவ போர்கருவி படையணி மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டது.
உடல் கட்டமைப்பு மற்றும் எடை தூக்கும் போட்டிகளில் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி முதலாவது இடத்தையும், சிங்கப் படையணி இரண்டாவது இடத்தையும், இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது.
பாரம் தூக்கும் போட்டிகளில் இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த கோப்ரல் எஸ்.கே.எஸ் பிரதீப் சிறந்த எடை தூக்குபவராகவும், இலங்கை பீரங்கிப் படையணி சம்பியனாகவும், இரண்டாவது இடத்தை இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியும் மூன்றாவது இடத்தை இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியும் பெற்றுக் கொண்டது.
ஆண்களுக்கான சிறந்த பாரம் தூக்காளராக இராணுவ பொது சேவைப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் வயி.டீ.ஐ குமார அவர்களும் பெண்களுக்கான சிறந்த பாரம் தூக்காளராக இராணுவ பொது சேவைப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் டீ.டீ.டீ அபேசேகர அவர்கள் தேர்ந்தெடுக்கப்ட்டனர்.
மேலும் பிரதம அதிதியினால் இந்த வெற்றீயீட்டிய வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.Running sport media | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals