28th December 2018 14:38:45 Hours
இலங்கை இராணுவத்திலுள்ள ‘அன்டி டேங் மிஷைல்ஸ்’ மற்றும் ‘பட்டாலியன் உதவி ஆயுத ‘ (பீஎஸ்டப்ள்யூ) பயிற்சிகளை நிறைவு செய்த படையினர்களின் வெளியேறும் நிகழ்வு (21) ஆம் திகதி வெள்ளிக் கிழமை மின்னேரிய காலாட் பயிற்சி மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 53 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.ஏ கொடிப்பிலி அவர்கள் வருகை தந்தார். இவரை காலாட் பயிற்சி மத்திய நிலையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுராஜ் பஸ்நாயக அவர்கள் வரவேற்றார்.
இந்த பயிற்சிகளில் இராணுவ அதிகாரிகள் 46 பேரும், 74 இராணுவ படை வீரர்களும், 2 கடற்படை அதிகாரிகளும், 2 விமானப்படை அதிகாரிகளும், ஒரு கடற்படை சிப்பாயும், 2 விஷேட அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் இருவரும், ஒரு சாஜனும் இணைந்து கொண்டு மூன்று மாத கால பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டனர்.
இந்த பயிற்சி நிறைவு விழாவில் விஜயபாகு காலாட்படையணியினரால் மேற்கொள்ளப்பட்ட கண்காட்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.Running sport media | Women's Sneakers