24th December 2018 13:52:48 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 61, 613 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த படையினருக்கு சட்டவிரோத போதை மருந்துகள் பயன்பாடு தொடர்பான செயலமர்வு (18) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.
இந்த செயலமர்வு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் கே.டீ.சி.ஜே திலகரத்ன அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் போதை தடுப்பு பிரிவின் உப பரிசோதகர் எஸ்.எம் பிரேமரத்ன அவர்களினால் இந்த செயலமர்வில் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.
இந்த செயலமர்வில் 28 அதிகாரிகளும், 440 படை வீரர்களும் இணைந்து கொண்டனர். Adidas shoes | Nike Shoes