Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd December 2018 17:11:40 Hours

மன்னாரிலுள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 54 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மாந்தை இலுப்பங்குளம் பிரதேசத்தில் வாழும் மாணவர்களுக்கு ஹேமாஸ் அவுட்ரீச் சம்மேளனத்தின் தலைவி திருமதி அனோமா சிரோமி மாஷக்கோராளா அவர்களின் அனுசரனையில் நத்தார் பரிசுப் பொதிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு (19) ஆம் திகதி புதன் கிழமை கல்லடி புனித இராஜப்பர் தேவாலயத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேராவும் அதிதிகளாக ஹேமாஸ் அவுட்ரீச் சம்மேளனத்தின் தலைவி திருமதி அனோமா சிரோமி மாஷக்கோராளா, 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் செனரத் பண்டார, 541, 542 ஆவது படைத் தலைமையகத்தின் கட்ளை அதிகாரிகள், இராணுவ உயரதிகாரிகள் இணைந்திருந்தனர்.

மேலும் கல்லடி புனித இராஜப்பர் தேவாலயத்தின் அருட்பணி பெலன் குரோஷ் அடிகளார் மற்றும் அருட்சகோதரி ஜீவாவதி கலந்து கொண்டிருந்தனர். short url link | New Balance 991 Footwear