Header

Sri Lanka Army

Defender of the Nation

21st December 2018 21:08:33 Hours

இராணுவ வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் நடாத்திய நத்தார் நிகழ்வுகள்

கொழும்பு இராணுவ வைத்தியசாலையினால் ஒழுங்கு செய்யப்பட்ட நத்தார் நிகழ்வுகள் திம்பிரிகஸ்ஸவில் உள்ள புனித தெரேசா மாதா தேவாலயத்தில் (18) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.

அருட்பணி அருட் தந்தை சந்தன பெரேரா அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இராணுவ சுகாதார சேவைப் பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க மற்றும் பிரிகேடியர் பு.ஏ.சி பெர்ணாண்டோ அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது தலைமையில் (20) ஆம் திகதி வியாழக் கிழமை கிளிநொச்சி ‘நெலும்பியஷ’கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அநுராதபுர மாவட்டத்தின் பேராஜர் நோபர்ட் அன்டிராடி அவர்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியின் அழைப்பையேற்று வருகை தந்தார்.

மேலும் அருட்பணி டெனியல் மூர்த்தி, விக்நேஸ்வரன் அடிகளார் வருகை தந்திருந்தனர். இதில் கிறிஸ்தவ கெரோல் கீதங்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் போன்ற மும்மொழிகளிலும் இசைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சிங்களம், இந்து, முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த குருத் தலைவர் 57, 65, 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிகள், பாதுகாப்பு முன்னரங்க கட்டளை தளபதி, கட்டளை தளபதிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Nike sneakers | Women's Nike Air Max 270 trainers - Latest Releases