19th December 2018 13:15:56 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு தலைமையில் 59ஆவது படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களின் பங்களிப்போடு நத்தார் தின கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க் கிழமை (18) முல்லைத்தீவு புனித பேதுரு ஆலயத்தில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன் போது கிறித்த மற்றும் இராணுவ பாடல் குழுவினரால் நத்தார் கெரோல் கீதங்கள் இசைக்கப்பட்டதுடன் பாரிய அளவிலான பொது மக்களும் கலந்து கொண்டனர். அத்துடன் இந் நிகழ்வில் அதிதியாக மேஜர் ஜெனரல் ராஜகுரு அவர்கள் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் மதத் தலைவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரான திருமதி ருபாவதி கேதீஸ்வரன் 59ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் பி ஆர் வனிகசூரிய 64ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர முல்லைத்தீவு பாதுகாப்பு முன்னரங்க அதிகாரியான பிரிகேடியர் ஜெ ஏ டீ பி ஜயதிலக ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரான திரு ஆர் ரமேஷ் குமார் மாதரம்பத்து பிரதேச செயலாளரான என் எம் பிரதீபன் மற்றும் பல உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். Nike sneakers | Nike Dunk - Collection - Sb-roscoff