Header

Sri Lanka Army

Defender of the Nation

11th December 2018 11:06:20 Hours

காரைநகர் சிவன் கோவில் இந்து பூசகர்களுக்கு இராணுவத்தினரால் 6 புதிய வீடுகள் நிர்மாணிப்பு

காரைநகர் சிவன் கோவில் இந்து பூசகர்களினதும் உள்ளூர் அதிகாரிகளின் வேண்டுக்கோளிற்கமைய யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 5 ஆவது பொறியியலாளர் சேவைப் படையணி மற்றும் 11 ஆவது இலங்கை இராணுவ காலாட் படையணியின் படையினரால் பொறியியல் மற்றும் தொழிநுட்ப வசதிகளுடன் 06 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டது.

ஆதற்கமைய இந் நிகழ்வானது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி அவர்களின் தலைமையில் கடந்த (09) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மத ஆசர்வாத பூஜைகளுடன் காரைநகர் சிவன் கோவில் பூசகர்களுக்கு 6 வீடுகள் கையழிக்கப்பட்டன. இப் பணிக்காக இராணுவத் படையினர்களின் வேண்டுக்கோளிற்கமைய காரை நகர் பிரதேசபையினரால் நன்கொடைகள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் யாழ் மாவட்ட ஆளுநர், அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் மற்றும் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களும் கலந்து கொண்டனர்.Sports brands | nike air max 95 obsidian university blue book list