Header

Sri Lanka Army

Defender of the Nation

05th December 2018 18:44:53 Hours

சுவிஸ்லாந்து தூதுவர் இராணுவத் தளபதியைச் சந்திப்பு

இலங்கை மற்றும் மாலைத்தீவின் தூதுவரான சுவிஸ்லாந்தின் மதிப்பிற்குறிய ஹன்ஸ்பீடர் மொக் அவர்கள் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை கடந்த புதன் கிழமை (05) கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

இராணுவச் செயலாளரான மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க அவர்களால் இத் தூதுவர் அவர்கள் வரவேற்கப்பட்டார். மேலும் இவ் அதிகாரியவர்களுக்கு இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கான விஜயமானது இதுவே முதன் முறையாக அமைகின்றது.

இவ் இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்னர் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் நினைவுச் சின்னத்தையும் வழங்கியுள்ளார்.

சுவிஸ்லாந்து தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கோர்ணல் கிரிஸ்டோப் கிரிஸ்ட்ஸ் அவர்களும் இச் சந்திப்பில் கலந்து கொண்டார். இச் சந்திப்பின் நிறைவில் பிரதம அதிதிகள் புத்தகத்தில் தமது கருத்தை குறிப்பிட்டனர். url clone | Air Jordan Release Dates 2021 Updated , Gov