Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd December 2018 12:42:03 Hours

இராணுவ ஆணைச்சீட்டு உத்தியோகத்தரின் மரணச்சடங்கு

இலங்கை இராணுவ 4 ஆவது பொறியியலாளர் படையணியில் 23 வருடஙகள் சேவை புரிந்து அதன் பின்னர் ஓய்வு பெற்றுச் சென்ற ஆணைச்சீட்டு உத்தியோகத்தரான் எஸ். சரவணமுத்து அவர்கள் யாழ் போதனை வைத்தியசாலையில் சுகையீனம் நிமித்தம் அனுமதித்திருந்து சிகிச்சை பலனின்றி நவம்பர் மாதம் (30) ஆம் திகதி காலமானார்.

இவர் சிலோன் இராணுவத்தில் 1958 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4 ஆம் திகதி இணைந்தார். பின்னர் காலத்துவக்கு படையணி , இராணுவ சேவை , இராணுவ 25 ஆவது வருடாந்த நினைவு விழா, நீண்டகால சேவை, ஜனாதிபதி போன்ற பதக்கங்களை பெற்றிருந்தார்.

இவரது இறுதி மரணச் சடங்குகள் யாழ் கொத்தியாலடி இந்து மையானத்தில் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன அவர்களது தலைமையில் இராணுவ அணியினரது மரியாதையுடன் பங்களிப்புடன் இடம்பெற்றது. Mysneakers | Nike