Header

Sri Lanka Army

Defender of the Nation

27th November 2018 20:57:00 Hours

பாகிஸ்தான் இராணுவ சமிக்ஞைப் படையணி பிரதானியவர்கள் இராணுவத் தளபதியை சந்திப்பு

பாகிஸ்தான் இராணுவ சமிக்ஞைப் படையணி பிரதானியான மேஜர் ஜெனரல் ஹாபீஸ் ஊர் ரஹ்மான் அவர்கள் இலங்கை இராணுவ சமிக்ஞைப் படையினரால் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச அலையமைப்பு தொடர்பான இரு நாள் (நவம்பர் 28- 29) கண்காட்சியில் கலந்து கொள்ளும் நோக்கில் இவ் விஜயத்தை மேற்கொண்டதோடு இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை செவ்வாய்க் கிழமை (27) கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

இவர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் போது சர்வதே மட்டங்களிலான தொழில் நுட்பம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதன் போது இவர்களுக்கிடையிலான ஞாபகார்த்த சின்னமும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் இராணுவச் செயலாளரான மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க சமிக்ஞைப் படையணியின் பிரதானியான மேஜர் ஜெனரல் நிலந்த ஹெட்டியாராச்சி அத்துடன் கேர்ணல் சஜித் அலி போன்றோர் கலந்து கொண்டு இராணுவத் தளபதியுடன் கலந்துரையாடினர். Buy Kicks | Air Jordan Release Dates 2020