Header

Sri Lanka Army

Defender of the Nation

27th November 2018 00:03:40 Hours

படையினரால் தென்னமராச்சி பிரதேசத்தில் வடிகான்கல் சீரமைக்கும் பணிகள்

படையினரால் சாவகச்சேரி நகர சபை அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தென்னமராச்சி பிரதேச செயலக அலுவலக பிரிவின் கோவில் குடியிருப்பின் பொதுமக்கள் குடியிருப்புப் பகுதிகளில் குவிந்த மழைநீரை தடுப்பதற்காக கடந்த 21 ம் திகதி புதன்கிழமை பொது மக்களுடன் இணைந்து வடிகான்கல் சீரமைக்கும் பணிகளை மேற் கொண்டனர்.

இப் பிரதேசத்தில் முறையான நீர் வடிகால் அமைப்பு இல்லாததால் கிராமத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பிரதேச செயலாளர் அலுவலகத்தில் தொழில்நுட்ப அலுவலர்களின் வேண்டுக்கோளுக்கமைய இராணுவ படையினரால் முழுமையான வடிகால் அமைப்பை உருவாக்கியதுடன் 6 புதிய கால்வாய்களுடன் பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் பணிகளை மேற்கொண்டனர். இத் திட்டத்தினால் 23 குடும்பங்கள் பயனடைந்தன.

இத் திட்டமானது சாவகச்சேரி நகரசபை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் மற்றும் 523ஆவது படைப் பிரிவினர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் இந்த நடவடிக்கைகளை மேற் கொள்ள மிகவும் தேவையான உதவிகளை வழங்கினர், அதன் படி 523 ஆவது படைப்பிரிவின் 12ஆவது கெமுனு ஹேவா படையினர் மற்றும் 4 ஆவது விஜயபாகு காலாட்படைப் படையினர்களால் இந்த அவசர பணிகள் மேற் கொள்ளப்பட்டன.jordan release date | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ