Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd November 2018 13:18:51 Hours

குறைந்த வருமானத்தை பெறும் நபர்களுக்கு இராணுவத்தின் ஏற்பாட்டில் சிகிச்சை முகாம்கள்

வெலிஓயா பிரதேச செயலகத்திற்குரிய கஜபாபுரத்தில் வசிக்கும் 1146 பொது மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகள் 62 ஆவது படைப் பிரிவினரின் ஏற்பாட்டில் கஜபாபுர பாடசாலையில் (17) ஆம் திகதி இடம்பெற்றது.

62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் எல்.ஏ.என்.எஸ் வணிகசிங்க அவர்களது அழைப்பையேற்று முப்படையைச் சேர்ந்த வைத்திய அதிகாரிகள் இப்பிரதேசத்திற்கு வருகை தந்து இந்த இலவச மருத்துவ சிகிச்சைகளை நடாத்தினர்.

இந்த மருத்துவ சிகிச்சையில் 11 மருத்துவ விஷேட நிபுணர்களும், 29 வைத்திய அதிகாரிகளும் பங்கேற்றிக் கொண்டு இந்த சிசிச்சை மருத்துவ முகாமை சிறப்பாக மேற்கொண்டனர்.

மருத்துவ சிகிச்சை முகாம் 62, 621 ஆவது படைப் பிரிவு மற்றும் 14 ஆவது (தொண்டர்) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பூரண ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.

இராணுவ மருத்துவ சேவை பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க அவர்களது பங்களிப்புடனும் இந்த மருத்துவ சிகிச்சை முகாம்கள் இடம்பெற்றன.

மேலும் 62 ஆவது படைப் பிரிவின் உயரதிகாரிகளும் இந்த சிகிச்சை முகாமில் பங்கேற்றுக் கொண்டனர். latest Running Sneakers | Jordan Shoes Sale UK