Header

Sri Lanka Army

Defender of the Nation

18th November 2018 11:30:44 Hours

தனது கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறு இராணுவத்திடம் வேண்டுகோள் விடுத்த மனைவி

முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59ஆவது படைத் தலைமையகத்தின் 593ஆவது படைப் பிரிவின் 19ஆவது கெமுனு ஹேவா படையின் 13 இராணுவப் படையினர் கொக்குதடி கிராமத்தின் மனைவியொருவரால் விவசாய வேலைகளில் ஈடுபடும் நோக்கில் செவ்வாய்க் கிழமை (13) வயலிறகு சென்ற தனது கணவரைக் காணவில்லையென இராணுவத்திடம் தெரிவித்ததுடன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் படையினரின் நீண்டநேர தேடுதலையடுத்து பாதுகாப்பற்ற மின் கம்பத்தினால் மின்சாரம் தாக்கப்பட்டு மேற்படி நபர் மரணித்துள்ளார். மேற்படி நபரது சடலம் அன்மையில் உள்ள வனப் பகுதியில் படையினர் மற்றும் பொலிசாரின் தலைமையில் மீட்கப்பட்டுள்ளது. இதன் போது குடும்பத்தார் மற்றும் அரச அதிகாரிகள் போன்றோர் காணப்பட்டனர்.

மேலும் முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் வழிகாட்டலின் கீழ் 59ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் பி ஆர் வனிகசூரிய மற்றும் 593ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி மற்றும் 19ஆவது கெமுனு ஹேவா படையின் கட்டளை அதிகாரிகளின் கண்காணப்பில் படையினர் இத் தேடுத்ல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மேலதிக விசாரனைகள் பொலிசாரால் மேற்கொள்ளப்படுகின்றது. Nike air jordan Sneakers | Zapatillas de running Nike - Mujer