Header

Sri Lanka Army

Defender of the Nation

15th November 2018 19:17:43 Hours

57ற்கு மேற்பட்ட காணிகள் பொதுமக்களிற்கு விடுவிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் உபயாகிக்கப்பட்ட மற்றும் உபயோகிக்கப்படாத முன்டிமுறிப்பு அரச சார்பற்ற காணிகளின் 56.8ஏக்கர் பரப்பளவான காணிகள் கடந்த புதன் கிழமை (14) விடுவிக்கப்பட்டது.

அந்த வகையில் 37.1 ஏக்கர் காணிகள் (ஒரு பகுதி) மற்றும் 19.7 (வெவ்வேறான பகுதி) போன்றன முன்னர் பாதுகாப்பைக் கருதி வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 20ஆவது இலங்கை சிங்கப் படையணியினரால் பயன்படுத்தப்பட்டது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியவர்களுக்கு பதிலாக 20ஆவது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் இந்துக்க விக்கிரமசிங்க அவர்கள் இக் காணிகளுக்கான பத்திரங்களை முல்லைத் தீவு மாவட்ட பிரதேச செயலாளரான திரு ஆர் கேதீஸ்வரன் அவர்களிடம் ஒப்படைத்தார்.

மேலும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் கட்டளைக்கமைய அரச சட்ட திட்டங்களிற்கு அமைவாக பாதுகாப்பு படைத் தலைமையகங்களின் மூலம் பொது மக்களிற்குறிய காணிகள் உடனடியாக பொதுமக்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Sneakers Store | adidas Yeezy Boost 700 , promo code for adidas shoes india delhi today