Header

Sri Lanka Army

Defender of the Nation

08th November 2018 12:15:49 Hours

கிளிநொச்சியில் இடம் பெற்ற தீபாவளி நிகழ்வுகள்

நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை மக்களிடையே உண்டுசெய்யூம் நோக்கில் கிளிநொச்சி பாதுகாப்பு படையினரால் தீபாவளி நிகழ்வூகள் செவ்வாய்க் கிழமை (06) இடம் பெற்றது.

57ஆவது படைத் தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களின வழிகாட்டலின் கீழ் 571ஆவது படைப் பிரிவின் விஜயபாகு காலாட் படையினரால் சிரமதானம் மற்றும் மரநடுகை நிகழ்வூகள் மலயாலபுரம் பத்தினிஅம்மன் கோவிலில் தீபாவளி வழிபாட்டு நிகழ்வூகள் இடம் பெற்றது.

அதேவேளை 572ஆவது படைப் பிரிவின் 6ஆவது இலங்கை சிங்கப் படையணியின் மற்றும் 14ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் பல அன்னதான நிகழ்வூகள் தோத்தாடிஅம்மன் கோயில் மற்றும் கண்ணகி அம்மன் கோயிலில் வழங்கப்பட்டது.

572ஆவது படைப் பிரிவின் 15ஆவது இலங்கை சிங்கப் படையணியின் விசேட தீபாவளி பூஜை வழிபாட்டு நிகழ்வூகள் சித்திவிநாயகர் கோவிலில் இடம் பெற்றது. 1ஆவது இலங்கை சிங்கப் படையினர் சிரமதானப் பணிகளை கோரக்காடு இந்து கோவில் வளாகத்தில் மேற்கொண்டதுடன் பூஜை நிகழ்வூகளையூம் மேற்கொண்டனர். அதேவேளை 574ஆவது படைப் பிரிவின் 3ஆவது கஜபா படையினரால் மாங்குளம் கணபதியம்மன் கோவிலில் 20 பொதுமக்களின் பங்களிப்போடு பூஜை நிகழ்வூகள் இடம் பெற்றது. Sport media | Jordan Release Dates , Iicf