Header

Sri Lanka Army

Defender of the Nation

06th November 2018 12:47:48 Hours

கோதமி பாடசாலையின் ‘வர்ண இரவு’ நிகழ்ச்சி

கொழும்பு கோதமி மகளீர் பாடசாலையின் ‘வர்ண இரவு’ நிகழ்ச்சி பாடசாலை கேட்போர் கூடத்தில் (5) ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதியை கோதமி பாடசாலையின் அதிபர் திருமதி சுபாஷினி தெமடகொட , பாடசாலை நிர்வாகத்தினர் மற்றும் பாடசாலை கெடற் மாணவிகள் அணிவகுத்து வரவேற்றனர்.

கோதமி பாடசாலையில் 2017 ஆம் விளையாட்டு துறைகளில் திறமைகளை வெளிக் காட்டி சாதனைகளை புரிந்த பாடசாலை மாணவிகளுக்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதி சான்றிதழ் மற்றும் வெற்றிக் கிண்ணங்களை வழங்கி கௌரவித்தார்.

கோதமி மகளீர் வித்தியாலயம் 1946 ஆம் ஆண்டு 10 ஆம் திகதி ஜூன் மாதம் 15 மாணவிகள் மற்றும் 8 ஆசிரியர்களுடன் திருமதி கிலடிஷ் பெரேரா அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.latest Nike release | Nike News