Header

Sri Lanka Army

Defender of the Nation

01st November 2018 16:02:02 Hours

இராணுவத்தினருக்கு மது போதை தடுப்புதொடர்பான விழிப்புணர்வு

திருகோணமலை பிரதேசத்தில் அமைந்திருக்கும் 22 ஆவது படைத் தலைமையகத்தில் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியின் ஆலோசனைக்கமைய இந்த படைப் பிரிவின் கீழ் இயங்கும் படையணி மற்றும் படைத் தலைமையகத்தில் கடமையாற்றும் இராணுவத்தினருக்கு மது போதை தடுப்பு தொடர்பான செயலமர்வு (29) ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெற்றது.

இந்த விழிப்புணர்வில் 16 இராணுவ அதிகாரிகளும் 215 படை வீரர்களும் கலந்து பயனைப் பெற்றனர்.

சமுதாயத்தில் இடம்பெறும் மது போதைகள் சீரழிவுகளை தடுக்கும் நோக்கத்துடன் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த விழிப்புணர்வு 22 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. தேசிய விபத்து மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி சாமர பிரதீப் கருணாரட்ன மற்றும் சிரேஷ்ட உளவியலாளர் சமந்தா நீல்மல்கொட ஆகியோரின் உளவியல் செயற்பாடுகளின் பணிப்பாளரின் அழைப்பின் பேரில் இது தொடர்பான விரிவுரைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிகள் இராணுவ உளவியல் பணியகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. latest Nike Sneakers | Nike for Men