Header

Sri Lanka Army

Defender of the Nation

29th October 2018 19:21:12 Hours

படையணிகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டியில் 24 ஆவது விஜயபாகு காலாட் படையணி வெற்றி

விஜயபாகு காலாட் படையணியினரால் 8ஆவது தடவையாக ஒழுங்கமைக்கப்பட்ட படையணிகளுக்கு இடையிலான குத்துச்சண்டை 2018 க்கான போட்டியானது போயகனையில் அமைந்துள்ள விஜயபாகு காலாட் படையணியின் உட்புற மைதானத்தில் நடைப் பெற்றது. இப் போட்டியில் 24 ஆவது விஜயபாகு காலாட் படையணி வெற்றிபெற்றன.

இப் போட்டி இறுதி நிகழ்விற்கு பரிசில்கள் வழங்க பிரதான அதிதியாக இராணுவத்தின் பிரதி பதவி நிலை அதிகாரியும் விஜயபாகு காலாட் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் கலந்து கொண்டார். அத்துடன் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இப் போட்டியானது விஜயபாகு காலாட் படையணியின் அனைத்து படையணியையும் பிரதிநிதித்துவப் படுத்தி 52 போட்டியாளர்கள் பங்குபற்றினர். இப் போட்டி ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை இடம் பெற்றது.

இப் போட்டியில் போட்டியிட்ட 51 போட்டியாளர்களையும் தோற்கடித்து 6 தங்க பதக்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கம் மற்றும் 1 வெண்கலம் பதக்கங்களையும் விஜயபாகு காலாட் படையணியின் குத்துச் சண்டை படையணியினர் வென்றனர். மேலும் தங்கபதக்கம் ஒன்றும், வெள்ளிப் மற்றும் 5 வெங்களப் பதக்கங்களையும் தனதாக்கி கொண்டு இரண்டாம் இடத்தை 20 ஆவது விஜயபாகு காலாட் படையணியினர் பொற்றுக் கொண்டனர். இப் போட்டியில் சிறந்த குத்துச்சண்டை வீரராக 24ஆவது விஜயபாகு காலாட் படையணியின் சாதாரன வீரர் வை.ஜீ.யூ.சி ஜயதிஸ்ஸ தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் சிறந்த தோல்வியாளராக 8 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் சாதாரன வீரர் ஆர்.எம்.கே.டி ரத்னாயக தெரிவு செய்யப்பட்டார். latest Running Sneakers | Nike for Men