Header

Sri Lanka Army

Defender of the Nation

29th October 2018 19:30:22 Hours

இராணுவத்தினரால் சைக்கிள் மற்றும் புத்தகங்கள் அன்பளிப்பு

இலங்கை ஆசிரியர்கள் சங்கம் மற்றும் டெரவல் க்ளப் அனுசரனையில் 56 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் பொகஸ்வெவ மஹா வித்தியாலயத்தில் (26) ஆம் திகதி வெள்ளிக் கிழமை பாடசாலை மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் மற்றும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவி நியோலி டீ அல்விஸ், 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிடிய அவர்கள் வருகை தந்து இந்த நன்கொடைகளை இந்த பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் 561 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் ஏ.சி.பி சில்வா , சுயாதீன தொலைக் காட்சியின் நிறைவேற்று அதிகாரி திரு சந்தன திலகரத்ன, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.

அத்துடன் 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிடிய அவர்களது தலைமையில் ஓமந்தை வித்தியாலயத்தில் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதியும், வவுனியா இந்து மத்திய கல்லூரியில் ஒக்டோபர் மாதம் (25) ஆம் திகதி புத்தகங்கள் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. Best Authentic Sneakers | Nike Shoes