19th October 2018 11:26:45 Hours
2018 ஆம் ஆண்டு படையணிகளுக்குஇடையிலான சூப்பர் லீக் கபடி போட்டியானது (ஆண் மற்றும் மகளிர்) கடந்த (18) ஆம் திகதி பனாகொட இராணுவ முகாம் உடற்பயிற்ச்சிகூடத்தில் இலங்கை இராணுவ கபடி வளையாட்டு கழகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.எஸ்.எல் பெரேரா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வின் இறுதி போட்டிக்கு பிரதான அதிதியாக நிதீமேலாண்மை மற்றும் இராணுவ பொது சேவைப் படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் டபில்யூ.ஆர் பலிஹக்கார அவர்கள் கலந்து கொண்டார்.
இந் இறுதிப் போட்டியானது பொறியியாளாலர் சேவை படையணி மற்றும் இராணுவ பொது சேவைப் படையணியிக்கும் இடையில் நடைப் பெற்றது.
2018 ஆம் ஆண்டிற்கான படையணிகளுக்கு இடையிலான ஆண்கள் கபாடி போட்டியில் பொறியியாளாலர் சேவை படையணி வெற்றிப் பெற்றதுடன், இலங்கை இராணுவ மகளிர் படையணிகளுக்கு இடையேயான சூப்பர் லீக் (மகளிர்) இறுதி போட்டி;யில் இராணுவ பொது சேவைப் படையணி வெற்றிப் பெற்றது. latest Nike release | Women's Nike Superrep