Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd October 2018 15:45:58 Hours

படையினர்களுடன் இணைந்து மாணவர்கள் மரக் கன்றுகள் நடும் நிகழ்வு

தேசிய மர நடும் நிகழ்வை முன்னிட்டு 543 ஆவது படைப் பரிவு படையினர்களினால் இப் பிரதேசத்தில் தொடங்கப்பட்ட மரக் கன்று நடும் திட்டத்தின் இன்னுமொரு சமுதாய திட்டமாக பெசலாய் பாத்திமா மகா வித்தியாலயத்தினரால் வழங்கப்பட்ட கோரிக்கையை முன்வைத்தது பாடசாலை வளாகத்தில் ஒரு பெரிய பங்கு மதிப்புள்ள மரக் கன்றுகளை நடும் நிகழ்வை கடந்த (19) ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலை வளாகத்தில் மேற் கொண்டனர்.

இந்த தேசிய மர நடும் நிகழ்வானது பெசலாய் பாத்திமா மகா வித்தியாலயத்தின் அதிபரான திரு மெரில் குரூஸ் ஆசிரியர்கள்; மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் படையினர்கள் இணைந்து இம் மர நடும் நிகழ்வில் ஈடுபட்டனர்.

இம் மர நடும் திட்டமானது 543 ஆவது படைப் பரிவின் கட்டளை தளபதியான எச்.எம்.டி.பி ஹெங்கில்பொல மற்றும் 54 படைப் பரிவின் சிவில் விவகார அலுவலக ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் கேணல் ஆர்.ஏ.டி.ஜர்ஜ் மேற்பார்வையின் கீழ் இது ஏற்பாடு செய்யப்பட்டது.Nike footwear | adidas