Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd October 2018 14:38:02 Hours

21 ஆவது படைப் பிரிவிற்கு புதிய படைத் தளபதி நியமிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 21 ஆவது படைப் பிரிவிற்கு புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் குமார ஜயபதிரன அவர்கள் வெள்ளிக் கிழமை (19) ஆம் திகதி தனது புதிய பதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

புதிய படைத் தளபதிக்கு அநுராதபுரம் ரணசேவாபுரத்தில் அமைந்துள்ள தலைமையகத்தில் 7 ஆவது படைக்கலச் சிறப்பணியினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து பௌத்த சமய மதகுருமார்களின் பங்களிப்புடன் ஆசிர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றன. பின்னர் மங்கள விளக்கேற்றி உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது பதவியை படைத் தளபதி பாரமேற்றார்.

இவர் இந்த பதவிக்கு வருவதற்கு முன்னர் இராணுவ சினைபர் பயிற்சி முகாமின் தளபதியாகவும், குகுளேகங்கையில் உள்ள சமாதான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் கட்டளை தளபதியாகவும் கடமை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

இந்த புதிய படைத் தளபதியினி பதவியேற்பு நிகழ்வில் 212 படைத் தளபதி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். latest jordan Sneakers | UOMO, SCARPE