Header

Sri Lanka Army

Defender of the Nation

19th October 2018 14:04:41 Hours

இராணுவ தினத்தை முன்னிட்டு வன்னி முஸ்லிம் சங்கத்தினால் ஜூம்ஆ பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனை

இலங்கை இராணுவத்தின் 69ஆவது ஆண்டு நிறைவு மற்றும் இராணுவ தினத்தை முன்னிட்டு வன்னி முஸ்லிம் சங்கத்தின் மௌலவிகளால் வவுனியா ஜூம்ஆ பள்ளிவாசலில் (மஸ்ஜித்) கடந்த (16) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலை விஷேட துஆப் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் அழைப்பை ஏற்று பள்ளிவாசல் இமாம் (தலைவர்) அவர்கள் கலந்து கொண்டு துஆ பிரார்த்தனைகளை படையினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நிகழ்த்தினார்.

அந்த வகையில் வரலாற்றிலேயே முதல் முறையாக முஸ்லிம் சங்கத்தினரால் தமது சுய விருப்பத்தோடு வன்னியில் துஆ பிரார்த்தனைகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ் விசேட பிராத்தனையானது இமாம் அவர்களால் வழங்கப்பட்டது. அதன்படி வவுனியா நகரில் உள்ள முஸ்லீம் பள்ளியின் தலைவரான அல் ஹபீல் அமீர் அவர்களின் முன்னிலையில் இப் பிராத்தனை இடம் பெற்றது. இந் நிகழ்வில் இராணுவதினர் மற்றும் வன்னி பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்துத் முஸ்லீம் தரப்பினரும் கலந்து கொண்டனர். அத்துடன் இப் பிராத்தனைகள் வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமைகத்தினரின் வழிக்காட்டலின் கீழ் 211 ஆவது படைப்பிரிவினரால் ஒழுங்கமைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பள்ளிவாசல் இமாம் அவர்களின் கிராஅத்துடன் வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து இராணுவ படையினர்களுக்கும் ஆசீர்வாதங்களும் வழங்கப்பட்டது.

பிரார்த்தனையின் முடிவில் வன்னிப் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பெரேரா அவர்களினால் வன்னி பிராந்தியத்திற்குச் சார்பாக பள்ளிவாசல் இமாம் அவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னமும் வழங்கி வைத்தார்.Sports Shoes | Nike