Header

Sri Lanka Army

Defender of the Nation

18th October 2018 16:04:30 Hours

நீர் குளக்கட்டுகளில் ஏற்பட்ட கசிவை சீரமைத்த படையினர்

வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் வழிகாட்டலின் கீழ் 61ஆவது படைப் பிரிவினர் கல்மடு பிரதேச செயலகத்திற்குற்பட்ட வைரவமுண்டிமுறிப்பு பிரதேசத்தின் நீர் குளக்கட்டுகளில் ஏற்பட்ட பாரிய கசிவை கிட்டத் தட்ட மூன்று நாட்களாக சிரமப்பட்டு (ஒக்டோபர் 15 -17 வரை) சீரமைத்துள்ளனர்.

இப் பணிகள் 61ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் கே டீ சி ஜி ஜெ திலகரத்ன அவர்களின் ஒருங்கிணைப்பில் 611ஆவது படைப் பிரிவின் தளபதியான கேர்ணல் எல் டீ எஸ் எஸ் லியனகே அவர்களின் கண்காணிப்பில் 25ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 17ஆவது (தொண்டர்) இலங்கை சிங்கப் படையினர் போன்றோர்களின் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இவ் வடிகானானது கடும் மழை காரணமாக குளக்கட்டுகளில் நீர் பெருக்கெடுத்ததோடு பாரிய கசிவும் ஏற்பட்டு கிராம வாசிகளுக்கும் பெரும் அச்சுருத்தலாக காணப்பட்டது. எனவே இதை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.trace affiliate link | Air Jordan