Header

Sri Lanka Army

Defender of the Nation

14th October 2018 19:00:56 Hours

முல்லைத்தீவில் படையினரது பங்களிப்புடன் சிரமதான பணிகள்

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு தின நிகழ்வை முன்னிட்டு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 68 , 681, 682 ஆவது படைத் தலைமையகத்தின் பங்களிப்புடன சிரமதான பணிகள் முல்லைத்தீவு பிரதேசத்தில் (12) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றன.

இந்த பணிகள் முள்ளிவைக்கால், புதுக்குடியிருப்பு கடலோர பிரதேசங்களில் படையினரால் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளில் இராணுவத்தைச் சேர்ந்த 250 அங்கத்தவர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.

இந்த சிரமதான பணிகள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ,கடலோரபத்து பிரதேச செயலாளர் மற்றும் படைத் தளபதிகளின் மேற்பார்வையுடன் இடம்பெற்றது.

682 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 18 விஜயபாகு காலாட் படையணியின் பங்களிப்புடன் வல்லிபுரம் இனியவளவு இல்லத்தில் உள்ள முன்பள்ளி சிறார்களுக்கு உணவு பொருட்களும் வழங்கப்பட்டன.

683 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 7 ஆவது கெமுனு ஹேவா படையணியின் பங்களிப்புடன் கலைவாணி , மதுஷா முன்பள்ளிகளில் குடிநீர் பானங்கள் வழங்கப்பட்டிருந்தன.

அத்துடன் 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது பணிப்புரைக்கமைய முள்ளியாவளை உத்தங்காரய் பிள்ளையார் கோயில் வளாகங்களில் சிரமதான பணிகள் 140 படையினரது பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகள் அனைத்தும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றன. bridge media | Sneakers Nike Shoes