15th October 2018 00:31:27 Hours
இலங்கை இராணுவத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழா ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி பனாகொடையில் அமைந்துள்ள சமிக்ஞை படையணி தலைமையகத்தில் இடம்பெற்றன.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக சமிக்ஞை படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் விஜயசிங்க அவர்கள் வருகை தந்தார். இவரிற்கு இராணுவ சம்பிரதாய முறைப்படு இராணுவ அணி வகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து படைத் தலைமையகத்தினுள் அமைந்திருக்கும் நினைவு தூபிக்கு படைத் தளபதி வருகை தந்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி அஞ்சலி செலுத்தினார்.
இச் சந்தர்ப்பத்தில் இராணுவ சமிக்ஞை படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் என்.எம் ஹெட்டியாரச்சி, மேஜர் ஜெனரல் டீ.ஏ.பி.என் தெமடம்பிடிய, மேஜர் ஜெனரல் எச்.பி செனவிரத்ன மற்றும் மேஜர் ஜெனரல் ரோவல் இணைந்திருந்தனர்.
அதனை தொடர்ந்து மஹா சங்க தேரர் அவர்களின் ஆசிர்வாதத்துடன் பௌத்த சமய ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து ‘ஹீல் தான நிகழ்வுகளும் இடம்பெற்றன. affiliate tracking url | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov