14th October 2018 00:13:24 Hours
கெமுனு ஹேவா படையணியில் ஜெனரல் பதவியேற்ற மேஜர் ஜெனரல் மஞ்சுல மனதுங்க அவர்கள் தமது உத்தியோகபூர்வ விஜயத்தை கடந்த வெள்ளிக் கிழமை (12) குருவிட்ட கெமுனு ஹேவா படைத் தலைமையகத்தில் மேற்கொண்டதோடு இதன் போது இராணுவ அணிவகுப்பு மரியாதை போன்றன வழங்கப்பட்டு இவ் அதிகாரியவர்கள் வரவேற்கப்பட்டார்.
மேற்படி அதிகாரியவர்கள் 1993ஆம் ஆண்டு வாழைச்சேனை நாசவன்தீவில் முகுது சுலன் எனும் நடவடிக்கையை மேற்கொண்ட கெமுனு ஹேவா படையணியின் அங்கவீனமுற்ற முதல் அதிகாரியுமாவார். இவ் அதிகாரியவர்கள் தமது சேவைக் காலத்தில் விளையாட்டுத் துரை சங்கீதம் கைவேலைப்பாடுகள் மற்றும் வயலின் வாசிக்கும் திறமைகள் போன்றவற்றைக் கொண்டுள்ளார். மேலும் இவர் கட்டளை அதிகாரியாக கெமுனு ஹேவா படையணியிலும் ஜெனரல் ஸ்டாப் அதிகாரியாக 23ஆம் படைப் பிரிவிலும் நிர்வாக அதிகாரியாகவும் சேவையாற்றினார்.
தற்போது மேஜர் ஜெனரல் மஞ்சுல மனதுங்க அவர்கள் ஹேகித்த ரணவிரு வள மையத்தில் தளபதியாகவும் சேவையாற்றுகின்றார்.
இவ் அதிகாரியவர்கள் கெமுனு ஹேவா படைத் தலைமையக அதிகாரியான பிரிகேடியர் கே பிரேமதிலக அவர்கள் வரவேற்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகளும் இதன் போது இடம் பெற்றது.
இந் நிகழ்வின் ஆரம்பத்தில் கெமுனு ஹேவா படையணியில் மரணித்த படை வீரர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டதோடு நிகழ்வின் இறுதிக் கட்ட அம்சமானது தேநீர் விருந்துபசாரத்துடன் நிறைவு பெற்றது.
இதன் போது பல அதிகாரிகள் படையினர் மற்றும் அவர்களது உறவினர்கள் போன்றௌர் கலந்து கொண்டனர். Sneakers Store | Jordan Shoes Sale UK