13th October 2018 10:14:21 Hours
இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திரிகா சேனாநாயக அவர்களது ஏற்பாட்டில் இராணுவ வைத்தியசாலையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க பஞ்சாயுத மாலைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
கொழும்பு பம்பலபிடியில் உள்ள ராஜா ஜூவலர்ஷின் அனுசரனையில் இந்த தங்க ஆபரணங்கள் இந்த குழந்தைகளுக்காக நன்கொடையாக (11) ஆம் திகதி வியாழக் கிழமை ஆண் குழந்தைகளுக்கு 9,800/= ரூபாய் மதிப்புள்ளதும், பெண் குழந்தைகளுக்கு 10,800/= ரூபாய் மதிப்புள்ள பஞ்சாயுதங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் இராணுவ சேவா வனிதா பிரிவின் பிரதித் தலைவி திருமதி அனுஷா பெர்ணாந்து, இராணுவ வைத்திய சேவைப் பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் டீ.டி.என் முனசிங்க, இராணுவ மருத்துவ சேவைப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க மற்றும் இராணுவ நலன்புரி பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீ.பி.எஸ்.டீ சில்வா அவர்கள் இணைந்து கொண்டனர்.Best Sneakers | Jordan Ανδρικά • Summer SALE έως -50%