Header

Sri Lanka Army

Defender of the Nation

12th October 2018 20:15:57 Hours

‘ரணவிரு செவனையில் இடம்பெற்ற இராணுவ நினைவு தின நிகழ்வு

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு ‘ரணவிரு செவன’ ராகமையில் இடம்பெற்ற இராணுவ தின நிகழ்வில் நாட்டின் நிமித்தம் விஷேட சேவைக்கு உட்பட்ட வீரர்களுக்கு போது புரோஸ்டேசு மற்றும் ஆர்த்தோடிக்‌ஸ் நிறுவனத்தினால் 15000 செயற்கை உறுப்புகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

முப்படைகளின் முனைஞரும் பிரதானியுமான மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது திட்டத்தின் கீழ் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது வழிக் காட்டலின் கீழ் இராணுவ புணர்வாழ்வு பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் திருநாவுக்கரசு அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த புதிய திட்டத்தில், வெளிநாட்டு பயிற்சி பெற்ற 25 இராணுவ தொழில்நுட்ப வல்லுநர்கள் செயற்கைக் கால்கள் மற்றும் மூட்டுகள் அல்லது புரோஸ்டீச்களை உற்பத்தி செய்வதோடு இதற்கு தேவையான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 80 மில்லியன் ரூபாய் செலவில் கட்டுமான வேலைகள் வடிவமைக்கப்பட்டன, அத்துடன் படையினர்கள் சுயமாக செயற்படக்கூடிய விதத்தில் இந்த உறுப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்து இந்த செயற்கை உறுப்புகளை பார்வையிட்டு அதன் சிலதை அங்கவீனமுற்ற படையினர்களுக்கு வழங்கி வைத்தார்.

அத்துடன் இராணுவ தளபதி இந்த நிகழ்வின் போது உரையாற்றுகையில் வெளிநாடுகளில் இருந்து எமக்கு உதவி புரிந்த நிறுவனங்களுக்கு நன்றியை இந்த நிகழ்வின் ஊடாக தெரிவித்தார்.

அத்துடன் இந்த செயற்கை உறுப்புக்கள் தொடர்பாக இராணுவ தளபதிக்கு இராணுவ புணர்வாழ்வு பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் திருநாவுக்கரசு அவர்கள் விளக்கமளித்தார்.

தற்பொழுது ராகம ரணவிரு செவனையில் நாட்டின் நிமித்தம் விஷேட சேவைகளுக்கு உட்பட்ட 115 படையினர்களுக்கு இந்த செயற்கை உறுப்புக்கள் முதல் கட்டமாக இச்சமயத்தில் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் இணைந்திருந்தனர். Buy Sneakers | Nike Air Max 270