Header

Sri Lanka Army

Defender of the Nation

07th October 2018 15:13:02 Hours

பாராளுமன்ற வளாகத்தினுள் வெள்ளத் தடுப்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபாடு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 14 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 12 ஆவது கஜபா படையணி, 4 ஆவது இலேசாயுத காலாட் படையணியினர் (7) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இணைந்து பாராளுமன்ற வளாகத்தினுள் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தும் அனர்த்த பணிகளில் ஈடுபட்டனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது வழிக் காட்டலின் கீழ் 14 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 63 இராணுவத்தினரது பங்களிப்புடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தியவென்ன ஓயாவில் ஏற்பட்ட நீர் மட்டத்தின் உயர்ச்சி நிமித்தம் பாராளுமன்ற வளாகத்தினுள் இந்த நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

மேலும் 58 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 8 ஆவது சிங்கப் படையணியினால் கடுகன்னாவை 61 ஆவது மைல் தொலைவில் உள்ள பிரதான கொழும்பு – கண்டி வீதியில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் நிமித்தம் முறிவடைந்த மரங்கள் இப்படையணியினால் அகற்றி வீதிகளை சீர்படுத்தியுள்ளனர்.bridgemedia | Sneakers