Header

Sri Lanka Army

Defender of the Nation

05th October 2018 20:30:47 Hours

இராணுவத்தின் 69ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு அபிஷேக பூஜை வழிபாடுகள்

இலங்கை இராணுவத்தின் 2018ஆம் ஆண்டின் 69ஆவது இராணுவ தினமான ஒக்டோபர் 10ஆம் திகதியை முன்னிட்டு கொழும்பு – 13இல் அமைந்துள்ள இந்து மத கோவிலான ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் கோவிலில் அபிஷேக பூஜை நிகழ்வுகள் கடந்த (4) திகதி இடம் பெற்றது.

இவ் விசேட அபிஷேக பூஜை நிகழ்வூகள் இலங்கை இராணுவ இந்து மத சங்கத்தின் தலைமையில் இடம் பெற்றதோடு இக் கோவில் குருக்கலின் தலைமையில் இந்து சம்பிராத முறைப்படியிலான ஆசீர்வாத பூஜைகள் இராணுவ கொடிகளுக்கு வழங்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக் கலந்து கொண்டதுடன் வருகை தந்த தளபதியவர்கள் இராணுவ இந்து மத சங்கத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் ஷாந்த திருநாவுக்கரசு அவர்கள் வரவேற்றார்.

இதன் போது இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இராணுவக் கொடிகளை ஆசீர்வாத பூஜைகளுக்காக கோவில் குருக்கலிடம் கையளித்தார்.

இதன் போது இந்து மத பூஜை வழிபாடுகள் பத்து இந்து மத குருக்கலின் தலைமைக் குருவான சிவ ஸ்ரீ சுரேஷ்வர அவர்களால் 69ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு இடம் பெற்றது.

இவ் அபிஷேகப் பூஜைகள் பழங்கள் மற்றும் நெய் போன்றவற்றைப் பயன்படுத்தி இந்து மத கலச்சாரத்திற்கு அமைவாக இறைவனைப் பிரார்த்தித்து மிகவும் துாய்மையான முறையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வுகளின் இறுதியில் இராணுவத் தளபதியவர்கள் இக் கோவிலிற்கு நன்கொடை வழக்கினார்.

இவ் இந்து மத வழிபாட்டு நிகழ்வூகள் இராணுவ இந்து மத சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு கோயில் தலைமைக் குருவான சிவ ஸ்ரீ சுரேஸ்வர அவர்களால் பூஜை நிகழ்வுகள் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் இராணுவ பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ பிரதி பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன நிறைவேற்று பணிப்பாளரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். Mysneakers | 『アディダス』に分類された記事一覧