Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd October 2018 13:55:17 Hours

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் சிறுவர் தின நிகழ்ச்சிகள்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது வழிக்காட்டலின் கீழ் கிளிநொச்சியில் இராணுவத்தினரது பங்களிப்புடன் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது பணிப்புரைக்கமைய 571 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் நஜீவ எதிரிசிங்க அவர்களின் ஏற்பாட்டில் மக்கள் வங்கியின் அனுசரனையில் இப்பிரதேசத்தில் சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வின்போது இந்த சிறுவர்களுக்கு சேமிப்பு கணக்குகளும் திறந்து வைக்கப்பட்டன

571 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 1 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் பங்களிப்புடன் கனகபுரம் மஹாதேவ சிறுவர் இல்லத்தில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

அத்துடன் 572 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 6 ஆவது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் நாலக கருணாரத்ன அவர்களது ஒத்துழைப்புடன் கனகபுரம் மஹாதேவ சிறுவர் இல்லத்தில் ‘சத்தசரங்க’ நடனக் குழுவினரின் நடன நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

572 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 14 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் மனோஜித ஜயகாந்த அவர்களினால் விஸ்வமடு முன்பள்ளியில் உள்ள 33 சிறார்களுக்கு காலை உணவுகள் சிறுவர் தினத்தை முன்னிட்டு வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் 573 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 15 ஆவது சிங்கப் படையணியினால் பன்னன்கன்டி, பரந்தன், மல்லவாய்கால் முன் பள்ளிகளில் சிறுவர் தினத்தை முன்னிட்டு (1) ஆம் திகதி 15 ஆவது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் ஜானக வைத்யரத்ன அவர்களது ஏற்பாட்டில் ‘சத்சரங்க’ நடனக் குழுவினரின் நடன நிகழ்வு இடம்பெற்றன.

அத்துடன் 574 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 3 ஆவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் விராஜ் கருணாரத்ன அவர்களது தலைமையில் மாங்குளம் சிறுவர் இல்லத்தில் இருக்கும் சிறரர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டன. affiliate link trace | Air Jordan