Header

Sri Lanka Army

Defender of the Nation

01st October 2018 14:34:35 Hours

64 ஆவது படைப் பிரிவினர் முல்லைத்தீவு சிறார்களுக்கு சிறுவர் தினத்தை முன்னிட்டு பரிசில்கள் வழங்கிவைப்பு

உலகலாவிய ரீதியிலான சிறுவர் தினத்தை முன்னிட்டு 64ஆவது படைப் பிரிவானது முல்லைத் தீவு பிரதேச பாடசாலைகளைச் சேர்ந்த 1200 பாடசாலை மாணவர்களுக்கான சித்திர போட்டிகளை கடந்த ஞாயிற்றுக் கிழமை (30) ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் நிகழ்த்தி பரிசில்களையூம் வழங்கி வைத்தது.

இதன் போது 64ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் கே ஜயநாத் ஜயவீர மற்றும் முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அத்துடன் சர்வதேச சேமிப்பு வங்கியின் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

இப் போட்டியானது 6ம் தர 5வயதிற்கு உற்பட்ட மற்றும் 1-2ஆம் தர 3-4-5ஆம் தர 6-7-8ஆம் தர 9-10-11ஆம் தர மற்றும் 12-13ஆம் தரத்தை சேர்ந்த மாணவர்களின் 1200 சித்திரங்கள் கிடைக்கப் பெற்றதுடன் இறுதியில் 200 சித்திரங்களே தேர்ந்தெடுக்கப்பட்டன. கொழும்பு சித்தக் கலை உயர் விரிவுரையாளரான திரு லலித் லசங்க அவர்களே இச் சித்திரங்களை தேரர்தெடுத்துள்ளார்.

இதன் போது வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் இதில் ஐந்து போட்டியாளர்களுக்கு பணப் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் கலந்து கொண்டவர்களுக்கு பாடசாலை உபகரணப் பொருட்களும் வழங்கப்பட்டது.

முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சர்வதேச சேமிப்பு வங்கியின் அதிகாரியான திரு திரன் கோமஸ் மற்றும் திரு துலக்சி பெரேரா மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆசிரியர்கள் அதிபர்கள் வருகை தந்ததுடன் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்கள் இவர்களை வரவேற்றார். Running sport media | Women's Designer Sneakers - Luxury Shopping