21st September 2018 17:33:27 Hours
கூட்டுப்படை அப்பியாச பயிற்சி நடவடிக்கைகள் கொழும்பில் உள்ள தாமரை தடாகத்தில் (20) ஆம் திகதி பிரமுகர்கள் மற்றும் பொது மக்களை மீட்கும் நடவடிக்கை பயிற்சிகள் இடம்பெற்றன.
தாமரை தடாக வளாகத்தினுள் கெலிகொப்டர் மூலம் தந்திரோபாயங்கள், சூழ்ச்சி நடவடிக்கைகள், இராணுவத்தில் பயிற்சிவிக்கப்பட்ட நாய்களை கொண்டு இந்த மீட்பு நடவடிக்கை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த கூட்டுப்படை அப்பியாச பயிற்சி நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, மூத்த ஜனாதிபதியின் பிரதி செயலாளர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அத்மிரால் ரவீந்திர விஜயகுணரத்ன, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன, கூட்டுப்படை அப்பியாச பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.
இந்த நடவடிக்கைகள் கொமாண்டோ படையணியின் ஆலோசனைக்கமைய 4 ஆவது கொமாண்டோ படையணியின் கட்டளை அதிகாரியின் தலைமையில் இடம்பெற்றன.
18 பேரைக் கொண்ட விஷேட கொமாண்டோ அணியினர் இந்த நடவடிக்கைளில் ஈடுபட்டனர். அவற்றில் நேபாள படையினர் நால்வரும் உள்ளடங்குவர்.
இந்த மீட்பு பணிகளில் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான 212 பெல் ஹெலிகொப்டர்களும் பயண்படுத்தப்பட்டன. Running sport media | Nike