Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd September 2018 15:36:09 Hours

இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட பக்மேவெவ குலம் மற்றும் மின்சார வேலிகள் திறந்து வைப்பு

இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட கோமரன்கடவல பக்மேவெவ ஏரி மற்றும் யானைகளிடம் இருந்து கிராமத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் மின்சாரத்தினால் அமைக்கப்பட்ட யானை வேலியும் திறந்து வைக்கும் நிகழ்வு (20) ஆம் திகதி வியாழக் கிழமை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையில் கோமரங்கடவலையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தின் ‘சிரிசர பிவிசும’ எனும் திட்டத்தின் கீழ் இராணுவ தளபதி அவர்களின் ஆலோசனைக்கமைய இலங்கை இராணுவ பொறியியலாளர்களினால் கிழக்கு பிரதேசத்தில் 30 கிலோமீட்டர் வரையில் யானைகளை கிராமத்திற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் இந்த மின்சார வேலிகள் அமைக்கப்பட்டன.

இராணுவ தளபதி அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கட்டிடக் கருத்து திட்டத்தின் கீழ் சிறு கிராமங்கள் உட்பட இலங்கை முழுவதும் 473 ஏரிகள் மீளமைத்து புனரமைப்பு பணிக்களினால் இலங்கை இராணுவ பொறியியலாளர்கள் நாட்டிற்கு சிறந்த சேவை வழங்குநர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்

அதன்படி இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட கோமரங்கடவல ஏரியானது புனரமைப்புக்கு முன் 220 ஏக்கர் அளவில் நீர் காணப்பட்டது, புனரமைக்கப்பட்டதின் பின்னர் 280 ஏக்கர் அளவுக்கு நீர் மட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப் புனரமைப்பு பணிகளுக்காக அரசாங்கம் 25 மில்லியன் ரூபா கணக்கிடப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினரால் ரூபா 15 மில்லியன் ரூபா குறைந்த செலவில் 9 மாதங்களுக்குள் இந்த பணியை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தினரில் வேண்டுக்கோளின் கீழ் திருக்கோணமலை மாவட்டத்தில் 400 ஏரிகள் மறுசீரமைக்கப்படவுள்ளது.

இதற்கிடையில் தொலைதூர கிராமங்களில் யானைகளின் வருகையை தடுத்து யானைகளிடம் இருந்து மக்களை காப்பாற்றும் நிமித்தம் இப் புதிய மின்சார வேலிகள் அமைக்க அரசாங்கத்திடமிருந்து 22 மில்லியன் ரூபா கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அதற்கமைய ரூபா 15 மில்லியன் குறைந்த செலவில் 9 மாதங்களுக்குள் இந்த பணியை இராணுவத்தினரின் முயற்ச்சியால் வெற்றிகரமாக புனரமைக்கப்பட்டது.

கோமரன்கடவல, கல்கடவல, மற்றும் கந்தமாலாவ போன்ற பிரதேசங்களுடன் மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கிய 30 கி.மீ வரை புதிதாக வேலிகள் அமைக்கப்பட்டுள்ளனர்.

இப் திட்டமானது இராணுவ தலைமைப் பொறியாளரின் ஆலாசனைக்கமைய லெப்டினென்ட் கேர்னல் பிரியந்த திஸாநாயக்க மற்றும் 1 ஆவது பொரியியலாளர் படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் ஸமில ஜாகொட அவர்களின் முழு மேற்பார்வையின் கீழ் இத் திட்டம் மேற் கொள்ளப்பட்டது.

இந்த புனரமைப்பு திட்டமானது அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டதுடன் இந் நிகழ்விற்கு கெபினட் அமைச்சரவை, அமைச்சர்கள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்விற்கு எதிர் கட்ச்சி தலைவரான பாரளுமன்ற உறுப்பினர் ஆர் சம்பந்தர் அவர்களும் கிழக்கு பிரதேச ஆளுநர் ரோஹித்த போகொல்லகம, பொலனருவை மாவட்ட செயலாளர் ரஞ்ஜித் ஆரியரத்ன, கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனான்வல, 22 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர உட்பட் சிரிசர பிவிசும புனரமைப்பு திட்டத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் நிரஞ்ஜன் ராமநாயக மற்றும் அரச அதிகாரிகளும் சிவில் மக்களும் கலந்து கொண்டானர். Buy Sneakers | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp