Header

Sri Lanka Army

Defender of the Nation

20th September 2018 13:48:10 Hours

படையினரால் இறையியல் நிறுவனம் மீள் நிர்மானிப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 231 ஆவது படைத் தலைமையக படையினர்களின் பங்களிப்புடன் மட்டக்களப்பு ஆயர் இல்ல வளாகத்தினுள் புனித சூசையப்பர் வாஸ் இறையியல் நிறுவன கட்டிடம் மீள் நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்த மீள் நிர்மானிப்பு பணிகள் 231 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் செனரத் நிவுன்ஹல மற்றும் 231 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் சூல அபேநாயக அவர்களது தலைமையில் 10 ஆவது கஜபா படையணி, 4 ஆவது கெமுனு காலாட் படையணி, 11 (தொ) இலங்கை சிங்கப் படையணி, 3 பொறியியலாளர் சேவைப் படையினர்களினால் இந்த கட்டிட மீள் நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துஷித்த பனன்வல அவர்கள் கிழக்கு மாவட்ட ஆயருடன் வருகை தந்து இந்த கட்டிட நிர்மான பணிகள் இடம்பெற்ற சமயத்தில் வந்து பார்வையிட்டார்.

இந்த கட்டிட மீள் நிர்மான பணிகள் நிறைவடைந்ததன் பின்பு 8 ஆம் திகதி சனிக் கிழமை ஆயர்களுக்கு இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது நிர்வாக பிரதானி பிரிகேடியர் ஏ.எஸ் ஹேவாவிதாரன அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து இந்த கட்டிடங்களை மட்டக்களப்பு மாவட்ட ஆயருக்கு கையளித்தார். Best Sneakers | Air Jordan Retro - 2021 Release Dates + Preview , Fitforhealth