20th September 2018 15:02:36 Hours
இலங்கை முன்னாள் இராணுவ சங்கத்தின் பிரதானிகளால் இன்று காலை (20) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களுக்கு பொப்பி மலர்கள் வழங்கி பொப்பி மலர் தின வாரத்தை ஆரம்பித்து வைத்தனர்.
இலங்கை முன்னாள் இராணுவ சங்கத்தின் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகளான பிரிகேடியர் கே.ஏ ஞானவீர, லெப்டினன்ட் கேர்ணல் ஏ.கே சியம்பலாபிடிய, மேஜர் ஜெனரல் அம்பன்பொல அவர்கள் வந்து இந்த பொப்பி மலர்களை மற்றும் கொடிகளை இராணுவ தளபதிக்கு சூட்டினார்கள்.
இந்த பொப்பி மலர் தின நிகழ்வு கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நடாத்துவதற்கான அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உலக போர் யுத்தத்தின் போது மரணித்த படை வீரர்களை கௌரவிக்கும் முகமாக இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.latest jordan Sneakers | Men’s shoes