Header

Sri Lanka Army

Defender of the Nation

19th September 2018 18:49:18 Hours

54 ஆவது படைப் பிரிவின் நிறைவு விழா

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 54 ஆவது படைப் பிரிவின் 8 ஆவது ஆண்டு பூர்த்தி விழா செப்டம்பர் மாதம் 6 – 9 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இந்த ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு 54 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் டப்ள்யூ.ஜி.எச்.ஏ.எஸ் பண்டார அவர்களது ஏற்பாட்டில் ஜூம்மா பள்ளிவாசல், திருக்கேதிஸ்வரம் கோயில், மடு தேவாலயம் மற்றும் மத்தோட்ட ராஜ மஹா விகாரையில் சமய ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன.

படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்விலும் படைத் தளபதி கலந்து கொண்டு படையினருடன் உரையாடலையும் மேற்கொண்டார்.

அன்றைய தினம் மாலை படைத் தலைமையகத்தில் இராணுவ இன்னிசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அதன்போது 56, 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிகளும் இணைந்திருந்தனர். latest Nike release | Autres