Header

Sri Lanka Army

Defender of the Nation

19th September 2018 18:55:23 Hours

தேசிய தொழில் பயிற்சி சான்றிதழ் நிறைவு விழா

வவுனியா தொழில் பயிற்சி மத்திய நிலையத்தில் தேசிய தொழில் பயிற்சியை நிறைவு செய்த 20 இராணுவத்தினருக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு (14) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றன.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது எண்ணக் கருவிற்கமைய இந்த பயிற்சிகள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டன.

வவுனியா மற்றும் அநுராதபுர பிரதேசங்களில் கடமை புரியும் படையினர்கள் 20 பேர் இந்த பயிற்சிகளை மேற்கொண்டு சிறந்த பெறுபேறுகளையும் பெற்றுக் கொண்டனர்.

வன்னிப் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்து பயிற்சிகளை நிறைவு செய்த படையினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் அநுராதபுர தேசிய தொழில் பயிற்சி நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரியந்த, பரீட்சை தேர்வு மதிப்பீட்டு அதிகாரி செல்வி எஸ்.எஸ்.எஸ்.பி குமுதினி, வவுனியா தேசிய தொழில் பயிற்சி நிலையத்தின் பிரதி பணிப்பாளர் திரு. ஜி.கே.டீ.சி குமார, வவுனியா தேசிய பயிற்சி நிலையத்தின் பயிற்சி அதிகாரி ஆர்.பி.டீ.எல் ராஜபக்‌ஷ , நிகழ்ச்சி அதிகாரி டி. ரூபிகா மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். jordan release date | Autres