Header

Sri Lanka Army

Defender of the Nation

18th September 2018 18:45:56 Hours

படையினரின் பங்களிப்புடன் டெங்கு ஒழிப்பு பணிகள்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 61 ஆவது படைப் பிரிவிற்குரிய 25 ஆவது இலேசாயுத காலாட் படையணியினால் பூவரசங்குளம் பாலர் பாடசாலை , பூவரசங்குளம் அரச வைத்தியசாலை மற்றும் சிறுவர் பூங்கா வளாகங்களில் டெங்கு ஒழிப்பு பணிகள் (16) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மேற்கொள்ளப்பட்டன.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் கே.டீ.சி.ஜி.ஜே திலகரத்ன அவர்களது தலைமையில் 25 ஆவது இலேசாயுத காலாட் படையணியினரால் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதான பணிகளில் பூவரசங்குளம் அரச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் திருவாகரன், அப் பிரதேச கிராம உத்தியோகத்தர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்திருந்தனர்.Running sport media | adidas Yeezy Boost 350