Header

Sri Lanka Army

Defender of the Nation

18th September 2018 18:35:22 Hours

யாழ் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் விநியோகம்

யாழ் பிரதேசத்தில் வசிக்கும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 22 பேருக்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்கள் துவிச்சக்கர வண்டிகள் (16) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வழங்கி வைத்தார்.

இது வரைக்கும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் பாடசாலை மாணவர்கள் 500 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தொலைவிலிருந்து பாடசாலைக்கு வரும் மாணவர்களுக்கே இந்த துவிச்சக்கர வண்டிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்விற்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் , கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் இணைந்திருந்தனர். அத்துடன் இராணுவத்தினரது இந்தசெயற்பாடுகளை முன்னிட்டு இராணுவத்தினருக்கு பாராட்டையும் தெரிவித்தனர். Mysneakers | Nike Dunk - Collection - Sb-roscoff