Header

Sri Lanka Army

Defender of the Nation

16th September 2018 14:27:48 Hours

ருகுனு பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு இராணுவத்தினரால் தலைமைத்துவப் பயிற்ச்சிகள்

இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் வழிக்காட்டலின் கீழ் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் ஆலோசனைக்கமைய ருகுனு பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் பெற்றுக் கொடுப்பதற்கு இப் படைத் தலைமையகத்தின் பயிற்ச்சி தலைமைத்துவத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டது.

அதற்கமைய இராணுவ தளபதியவர்களின் வேண்டுக் கோளுக்கிணங்க தொழிநுட்ப விஞ்ஞான பீடத்தில் 106 மாணவர்களும் அவர்களின் விரிவுரையாளர்களும் (14) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இப் பயிற்ச்சியில் கலந்து கொண்டனர்.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரதான பதவி அதிகாரி II மேஜர் கே.ஆர்.எம்.எம்.பி அபேவர்தன அவர்கள் இப் பயிற்ச்சியில் பயிற்ச்சிவிப்பாளராகவும் விரிவுரைகளும் வழங்கினார்.

மாலையில், இப் பயற்ச்சியில் பங்கேற்பார்கள் அனைவரும் பொக்ஸ் ஹில் பகுதியை பார்வையிட்டனர் மேலும் அந்த இடம் மற்றும் அதன் வரலாற்று பற்றி மேலும் அறிந்து கொண்டனர். spy offers | シューズ